Song Lyrics

Here are some lyrics (mostly tamil) that are ingrained in my memory – probably nostalgia. See if you can guess the song/movie. Hindi/English lyrics are towards the end of the page.

தமிழ்

எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென
மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே

காதல் எந்தன் வீதி வழி கைய வீசி வந்த பின்னும்
கால் கடுக்க காத்திருக்கு எதனாலே
February மாதத்துக்கு நாளு ஒன்னு கூடிவர
ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே

உசிா் என்னோட இருக்கயில
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் ஜீவனில் நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா

உலகம் வாழ நிதி ஒதுக்கு என் உயிரும் வாழ மடி ஒதுக்கு
அரசன் வாழ விதி இருக்கு அதற்கு நீதான் விதி விலக்கு
மன்னனே…மன்னனே இதோ இவள் உனக்கு

முகை முகில் முத்தென்ற நிலைகளிலே
முகந்தொட காத்திருந்தேன்…….
மலர் என்ற நிலை விட்டு பூத்திருந்தாய்
மணம் கொள்ள காத்திருந்தேன்…….
மகரந்தம் தேடி நுகரும் முன்னே
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்…….
நல்லை அல்லை நல்லை அல்லை

மின்னல் கோடி சேர்த்து வைத்து நீ சிரித்த காட்சிகள்
யாவும் இன்று மாயமாக யாரை கேட்க சாட்சிகள்
உன்னை எண்ணி வாழ்ந்த காலம், கண்கள் ரெண்டும் ஈரமாக
காதல் ஒன்றும் காயமல்ல, காலப்போக்கில் ஆறி போக
நெஞ்சம் எல்லாம் வாடுதே தழும்புகளால்

பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில் தோளில்
சாய்ந்து கதைகள் பேச நமது விதியில்
இல்லை முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு

அதி காலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே

நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே

சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது
உள்ளங்கைத் தேனே கள்வன் நாந்தானே
கள்வனைக் கொள்ளை கொண்ட கள்ளி நீதானே
நீ என்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்
முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்

பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே

கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்!

உன் கனத்த கூந்தல் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

வளர்ந்தாலும் நான் இன்னும்
சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட
நீ சொல்லித்தான்

உன் பாதம் போகும் பாத
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பாத்துக் காத்து நின்னேனே

தனிமையிலும் தனிமை
கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில்
எதற்கு இந்த இளமை

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

தாழம்பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு
தோளைச் சுட்டு காயமாச்சு
பார்வையாலே நூறுப் பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னை கிள்ளாதிரு
பூவே என்னை தள்ளாதிரு
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே

எனது வாழ்வு எனது வீடு என்று வாழ்வது வாழ்க்கையா ?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ?
படிக்கத்தான் பாடமா நெனச்சு பாத்தோமா ?
பிடிச்சத நெனச்சு நாம் நடக்க தான்

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா

மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

உனது பேரெழுதி பக்கத்திலே 
எனது பேரை நானும் எழுதி வெச்சேன் 
அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன் 
மழை விட்டும் நான் நனைஞ்சேன்.. 

சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
சொல்லித் தெரிந்த முறை தானே
சொர்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே
உள்ளம் என்பது சரியாய் இருந்தால்
உலகம் முழுதும் இனிக்கிறது
உதிர போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது

இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்
என்று காத்து கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைக் கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனல் ஆகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
மன்மதக் கோயிலில் பால் அபிஷேகம்

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்ற தென்பது மெய்தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் .. சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே

நதி எங்கு செல்லும் கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ

நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன்
சில பெண்களை விட மாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பை காற்றில் விட மாட்டேன்
அதை கவர்வேன் தர மாட்டேன்

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எரிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை

சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது
அழகில் அழகு தேவதை

தாமரை மலர்கொண்டு உடல் செய்த ஓவியமே
என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை
காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை

மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு
பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி பழகு
சொல்லி முடிக்கும் ஓர் சொல்லின் வட்டத்தில் பலர் சொல்லி போன ஒரு பொருள் இருக்கும்
சொல்லை கடந்த பெண்ணின் மௌன கூட்டுக்குள் பல கோடி கோடி பொருள் குடி இருக்கும்

இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

முகம் பார்க்க நானும்
முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை
மறைத்தாலே பாவம்

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம் கூடும் காலம் வாராதா
மாமன் காதில் ஏறாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம் மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்

வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே…
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே

பூமி இது வாடக வூடு
புரிஞ்சிக்கிட்டு குடித்தனம் பாரு

நெத்தி முடி சுத்தும் பாம்பு போல்
என்னை சீண்டி பாக்குதடி
சின்ன புள்ள செய்யும் வீம்புபோல்
கை தீண்டி பார்க்குதடா

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே!
உன் மனது போகும் வழியை
எனது மனதும் அறியுமே!
வானத்தில் பறக்கிறேன்!
மோகத்தில் மிதக்கிறேன்!
காதலால் நானுமோர்
காத்தாடி ஆகிறேன்!
ஆயிரம் அருவியை
அன்பிலே நனைக்கிறாய்!
மேகம் போலே – எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைகிறாய்!

உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா

Hindi / English

मेरा दिल भी कितना पागल है
ये प्यार तो तुम से करता है
पर सामने जब तुम आते हो
कुछ भी कहने से डरता है

तू कौन है, तेरा नाम है क्या, सीता भी यहाँ बदनाम हुई
फिर क्यूँ संसार की बातों से, भीग गये तेरे नयना
कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना
छोड़ो बेकार की बातों में कहीं बीत ना जाए रैना

तुमने मुझको हसना सिखाया
रोने कहोगे रो लेंगे अब
आँसू का हमारे गम ना करो
वो बहते है तो बहने दो

She
May be the reason I survive
The why and wherefore I’m alive
The one I’ll care for through the rough and rainy years
Me I’ll take her laughter and her tears
And make them all my souvenirs
For where she goes I’ve got to be
The meaning of my life is
She, she, she

Love can touch us one time
And last for a lifetime
And never let go ’til we’re gone

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments