படித்ததில் பிடித்தது

எழுபத்தைந்து வயதில்….. ஆதரவு இன்றி நிக்குது மனசு… நாற்பதைந்து வருடம் – அவளை கொண்டாடி இருக்கலாம்…. என்  கோபத்தை தள்ளுபடி செய்து அவளை கொண்டாடி இருக்கலாம்…. அவள் சமையலை நிறைய பாராட்டி இருக்கலாம்.. ஒரு நாள் நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம்.. ஒரு நாள் ஏனும் அவளுக்கு பதில் – நான் அவள் துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம்.. ஒரு நாள் ஏனும் TV யையும், Mobil லையும் அனைத்து விட்டு, அவளை கொஞ்சி இருக்கலாம்.. ஒரு நாள் ஏனும் வேலை தளத்தின் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்… ஒரு நாள் ஏனும் – என்  விடுமுறை நாட்களில் – அவளை சினிமாக்கு அழைத்து சென்று இருக்கலாம்.. ஊர் ஊராய் சுற்றி உட்சாகம் அடைந்து இருக்கலாம்… அவள் விரும்பி கேக்காத போதும் – ஒரு saree வாங்கி கொடுத்து இருக்கலாம் ஒரு மாசம் ஏனும் – என் முழு சம்பள பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்…. …

Continue reading