படித்ததில் பிடித்தது

எழுபத்தைந்து வயதில்…..
ஆதரவு இன்றி நிக்குது மனசு…

நாற்பதைந்து வருடம் –
அவளை கொண்டாடி இருக்கலாம்….
என்  கோபத்தை தள்ளுபடி செய்து
அவளை கொண்டாடி இருக்கலாம்….

அவள் சமையலை நிறைய
பாராட்டி இருக்கலாம்..
ஒரு நாள் நான் சமையல் செய்து
அவளுக்கு ஊட்டி இருக்கலாம்..

ஒரு நாள் ஏனும் அவளுக்கு பதில் –
நான் அவள் துணியையும் சேர்த்து
துவைத்து இருக்கலாம்..

ஒரு நாள் ஏனும் TV யையும்,
Mobil லையும் அனைத்து விட்டு,
அவளை கொஞ்சி இருக்கலாம்..

ஒரு நாள் ஏனும் வேலை தளத்தின்
கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே
விட்டு விட்டு வந்து இருக்கலாம்…

ஒரு நாள் ஏனும் –
என்  விடுமுறை நாட்களில் –
அவளை சினிமாக்கு அழைத்து சென்று இருக்கலாம்..

ஊர் ஊராய் சுற்றி
உட்சாகம் அடைந்து இருக்கலாம்…
அவள் விரும்பி கேக்காத போதும் –
ஒரு saree வாங்கி கொடுத்து இருக்கலாம்

ஒரு மாசம் ஏனும் –
என் முழு சம்பள பணத்தை
அவளிடமே கொடுத்து இருக்கலாம்….

ஒரு நாள் ஏனும்
காலையில் அலாரத்தை
கொஞ்சம் அனைத்து வைத்து
அவளை தூங்க விட்டு இருக்கலாம்…

நீ சாப்பிட்டியா
என்று கேட்டு இருக்கலாம்…
நீயும் வா
என்னுடன் வந்து சாப்பிடு
என்று சொல்லி இருக்கலாம்…

அவள்  உடல் நலத்தை
விசாரித்து இருக்கலாம்…
அவள் தன்னை கவனிப்பதை விடுத்து
நம் பிள்ளைகளை கவனிப்பதை
நான் கொஞ்சம் –
அவளை கவனித்து இருக்கலாம்..

அவள் நோயில் விழுந்த போது
நான் கடன் பட்டேனும்
காப்பாற்றி இருக்கலாம்…

என்  தாயே
தாரமே –

நீ
என்னுடன் இருந்த போது
நான் கம்பிரமாய் வாழ்ந்தேன்…

நீ
என்னை விட்டு போனதும்
நான் பலமுறை கால் தடுக்கி
விழுகிறேன்…

என்னை
தூக்கி விடவும்
மூத்தவனுக்கு நேரம் இல்லை…
தேனீர் ஏனும்
போட்டுதர இளையவனுக்கும்

சினம் வருது…
என்
மனைவியே உன்னை
நான் கொண்டாடி இருக்க
வேண்டும் …
நான்
தவறு இழைத்ததுக்கு
மன்னித்து விடு…

ஒரு முழ பூ வேனும்
வாங்கி தராதவன்
நான்…

மூச்சு இழந்த – உன்
புகைப்படத்துக்கு தினம் தினம்
மாலை இட்டு மன்னிப்பு
கேட்கிறேன்..

மனைவியே
மன்னித்து விடு..
மீண்டும்
ஒரு பிறப்பு இருக்குமே என்றால்
நீயே மனைவியாய் வந்து விடு

நான் உன்னைக் கொண்டாட வேண்டும்..

எழுபத்தைந்து வயதில்…..
இந்த நிலை வராமலிருக்க….
மனைவியை
நேசியுங்கள்…

வாழ்க்கை வசந்தமாகும்….

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments